1.3.2024-4AM செல்வகுமார் வானிலை விண்வெளி அறிக்கை.

1.3..2024-4AM செல்வகுமார் வானிலை & விண்வெளிஅறிக்கை.

முன்னறிவிப்பு :

தமிழ்நாடு :கடலோரம் உயரழுத்த காற்று நுழைவு காரணமாக கடலோரம்
அதிகபட்ச வெப்பம் சற்று குறைந்தும் உள்ளே மேற்கே வெப்பம்
உயர்ந்து காணப்படும்.

சமவெளி பகுதி இரவு நேரகுறைந்தபட்ச வெப்பம் நாமக்கல்
மாவட்டத்தில் மிகவும் குறைந்து காணப்படும்.

மழை வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

மார்ச் 15 தேதிக்கு மேல் தென் மாவட்டங்களில் தொடங்கி
படிப்படியாக மெல்ல பரப்பில் அதிகரிக்கும். ஏப்ரல் 15 க்கு மேல்
மே முடிய கோடை மழை தமிழ்நாட்டில் கூடுதல் பரப்பில் இருக்கும்.

வெயிலும் சராசரிக்கு கூடுதல் இருக்கும்.மழையும் ஆங்காங்கே ஆங்காங்கே
ஒதுக்கி ஒதுக்கி கூடுதல் இருக்கும்.வெயில் அனைவருக்கும் கூடுதல் கொடுக்கும்.

பிற அனைத்து மாநிலங்கள் :மேற்கத்திய இடையூறு காஷ்மீர் வருகை.

பிப்ரவரி 29 மார்ச் 1,2,3 காஷ்மீர்,லடாக்,பஞ்சாப்,
இமாச்சலபிரதேசம், சண்டிகர், உத்தரகாண்ட் மாநிலங்களில் காற்றுடன்
ஐஸ் மழை, குளிர் நீர் மழை,பனி சரிவு ஏற்படும் வாய்ப்பு.

மார்ச் 2,3 இல் உத்திரப்பிரதேசம் டெல்லி, வடக்கு ராஜஸ்தான்
இடிமழை வாய்ப்பு.

மார்ச் 1,2,3,4இமயமலையில் ஐஸ் மழை ஒரு சில இடங்களில்
பனிச்சரிவுஏற்பட வாய்ப்பு.

============

01.03.24 இன்று தமிழ்நாட்டின் கிழக்கு ஓரம் மேற்கு ஓரம்
சூரியன் உதயம் மறைவு நேர விபரம்.

கிழக்கு ஓரம் பழவேற்காடு ↑ 06:26AM ↓ 06:17 PM
சென்னை ↑ 06:25AM ↓ 06:17PM
ஊட்டி ↑ 06:39AM ↓ 06:32 PM
மேற்கு ஓரம் எருமாடு (நீலகிரி மேற்கு ஓரம் ) ↑ 06:41 AM ↓ 06:35PM


தமிழ்நாட்டின் கிழக்கு ஓரத்திற்கும் மேற்கு ஓரத்திற்கும் சூரியன் உதிப்பதில் நேர வேறுபாடு
15 நிமிடங்கள்.

================
மன்னார்குடியில் சூரியன், சந்திரன்
இன்றைய பகல் நேரம்.06:27AM– 06:22PM
நண்பகல் நேரம் உச்சிக்கு சூரியன் வருதல்
12.24மணி.

11 மணிகள் 54 நிமிடங்கள் 59 வினாடிகள்
உதயம் 98°கிழக்கு கி தெ கிழக்கு.மறைவு 262°
மேற்கு மே தெ மேற்கு.

இன்று 01.03.24 பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்:148.237மில்லியன் கிலோமீட்டர்.

============================

இன்றைய பகல் பொழுது
குறித்த விளக்கம்.

இன்றைய துல்லிய பகல் நேரம் 11 மணிகள் 54 நிமிடங்கள்
59 வினாடிகள்(29 Feb 2024).

இரவு பொழுது 12 மணிகள் 5 நிமிடங்கள் 1 வினாடிகள்

இன்றைய (1 march 2024) பகல் பொழுது
நேற்று (29 Feb 2024) விட 34 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல்.

நிலநடுக்கோட்டில் இருந்த (22 Dec 2023)விட இன்று
24 நிமிடங்கள் 47 வினாடிகள் பகல் பொழுது கூடுதல் .

கடகரேகையில் இருந்த (21 Jun 2023) விட இன்று
49 நிமிடங்கள் 56 வினாடிகள்

பகல் பொழுது குறைவு

சந்திரன்மன்னார்குடியில் இன்று சந்திரன்
உதயம் நேரம்10.52 PM 100 டிகிரி கிழக்கு

இன்று சந்திரன் மறையும் நேரம்காலை 9.58 மணி
263 டிகிரி மேற்கு

இன்று 75% அளவிற்கு ஒளி வீசும்.

நேற்று 29.02.2024 சந்திரன் பூமி
இடையே தூரம் 4,02,295கிலோமீட்டர்.

இன்று 1.3.2024 சந்திரன் பூமி இடையே தூரம்
3,99,157 கிலோமீட்டர்.

நேற்று சந்திரன் இருந்த தூரத்தை விட இன்று
3,138 கிமீ குறைவு

அடுத்து அமாவாசை நேரம் மார்ச் 10- 2024, மதியம் 02.30 மணி.

அடுத்த முழுநிலவு பௌர்ணமி நேரம். மார்ச் 25- 2024,

மதியம் 12.30 மணி.

01.03.2024 வெள்ளிக் கிழமை.

சூரியக்குடும்பம் தகவல்.

சூரியன்
உதயம் 06:27AM
மறைவு 06:22PM
நண்பகல் நேரம்
உச்சிக்கு சூரியன் வருதல்
12.24மணி.

மன்னார்குடி பகுதியில் இருந்து பார்த்தால்
தெரியும் கோள்கள் மற்றும் நேரம் :

புதன் கோள்
உதயம் 06.36AM
மறைவு 06.30PM
உச்சி மதியம் 12.33
கருத்து விளக்கம்:

பார்க்க முடியாது. காலை 6.27க்கு சூரியன் உதிக்கும் 6.36 AM புதனும்
உதிக்கும். பார்க்க விண்ணில் சூரியனுக்கு அருகே இருக்கும் சூரியன்
பிரகாச ஒளியால் பார்க்க முடியாது.

வெள்ளி
உதயம் 05.02AM
மறைவு 04:41PM
உச்சி 10:51AM
குறிப்பு :
5.02AM முதல் சூரியன் உதிக்கும் நேரம் வரை அதிகாலை
கிழக்கே பார்க்கலாம். வெளிச்சம் வரும் வரை பிரகாசமாக பார்க்கலாம்.
பிறகு சூரியஒளி வந்துவிடும் என்பதால் பார்க்க முடியாது.

செவ்வாய்
உதயம் 04.49AM
மறைவு 4:25 PM
உச்சி 10:37 AM
பார்ப்பது கடினம். சூரியன் உதிக்கும் நேரம் காலை 6.27 க்கு முன்
கடும் முயற்சி செய்து கிழக்கே உதிக்கும் போது
வெள்ளி கிராகத்திற்கு சற்று மேலே வெள்ளி உதிக்க
11 நிமிடங்களுக்கு முன்னர் உதிப்பதை பார்க்கலாம்.
5.45 க்கு பிறகு கிழக்கே வெளிச்சம் வந்துவிடும்
பார்ப்பது சற்று கடினம்.

வியாழன்
உதயம் 10.00 AM
மறைவு 10.26 PM
உச்சம் 04.13 PM

சூரியன் மறைந்த பிறகு
மாலை 6.22 முதல்
வியாழன் மறையும் நேரம்
இரவு 10.26வரை
பார்க்க நன்றாக இருக்கும்.

சனி
உதயம் 06.27AM
மறைவு 6.16 PM
உச்சி 12.22PM

சூரியன் சனி இரண்டும் ஒரே நேரத்தில் 9 நிமிட நேர
வித்தியாசத்தில் மறைகிறது பார்க்க முடியாது.

யுரேனஸ்
உதயம் 10.30AM
மறைவு 11.00PM
உச்சி 04.45 PM
பார்ப்பது கடினம்.

நெப்டியூன்
உதயம் 07.24AM
மறைவு 07.23PM
உச்சி 01.23PM
பார்ப்பது மிகவும் கடினம்.

பூமி நாம் வாழ்வது.அறிந்ததே.

ந.செல்வகுமார்
01.03.2024-4AM
வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *