2023 ஜூலை 12 புதன் அதிகாலை ஆய்வறிக்கை
வங்கக்கடல் மேலடுக்கு சுழற்சி, ஆந்திர கரையோரம் நகர்ந்தது. அது ஆந்திர தரை பகுதிக்கு மேலாக தெலுங்கானா வழி, மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் வழியாக வட இந்தியா பகுதி நோக்கி நகர இருக்கிறது.
இதன் காரணமாக
கேரளா கர்நாடகாவில் சற்று தென்மேற்கு பருவ மழை சற்று வலுத்து பொழியும்.
இதன் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கணவாய் பகுதிகள் காற்று பகுதிகளில் சாரல் மழை இருக்கும். முற்பகலில் காற்று வந்தாலும் மதியத்திற்கு மேல் சாரல் மழை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் மாலை இரவு இடி மழை வடகடலோர மாவட்டங்களில் சற்று வலுத்திருக்கும்.
ஜூலை 16 வரை தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் முதல் வங்கக் கடலோரம் வரை மாலை இரவு இடி மழை ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் பரப்பில் கிடைக்கும். காற்று பகுதிக்கும் லேசான மழை பொழிவு கிடைக்கும்.
ஜூலை 15,16, 17தென் மாவட்டங்கள், மாவட்டங்கள் உட்பட
அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பரப்பில் மழை வாய்ப்பு இருக்கிறது.
காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும்.
அதனை அடுத்து தென்சீனா கடல் பகுதி நிகழ்வு
தாய்லாந்து மியான்மர் வழியாக வங்கக் கடலுக்கு வந்து ஜூலை 18 19 தேதிகளில் தீவிரமடைந்து ஓடிஸா கரையை கடந்து அந்த நாட்களில் தென்மேற்கு பருவமடைய சற்று தீவிரப்படுத்தும்.
அது TEJ புயலாகி
தென்மேற்கு பருவ மழையை கேரளா கர்நாடகாவில் தீவிரப்படுத்தும்.
மேலும் ஜூலை 25க்குள் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது.
ஜூலை இறுதியில் தான் தென்மேற்கு பருவமடை கூடுதல் மழை பெய்ய தென்னிந்தியாவின்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கேரளா கர்நாடகாவில் கொடுக்கும்.
அதைவிட ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.
செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.
படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை