நிகழ்வுகள் ஒடிசா கரையோரம் வருகை,இடிமழையும் பருவமழையும் தீவிரம் எப்போது

2023 ஜூலை 17 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை

தற்பொழுது ஒடிசா கரையோரமாக தாழ்வு பகுதி நீடிக்கிறது. இந்த தாழ்வு பகுதி
கேரளா கர்நாடகா தென்மேற்கு பருவமழைக்கு சாதகம் இல்லை. தமிழ்நாட்டில் வெப்பசசலன மழை பொழிவு மிகக் குறைந்த பரப்பில் இருக்கும்.
நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வரை மழைப்பொழிவு அமைந்தது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் இடங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் பரவலான மழை பொழிவு கொடுத்தது.
வேலூர் ராணிப்பேட்டை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பொழிவு ஆங்காங்கே அமைந்தது.
சேலம் மாவட்டத்திலும் மேட்டூர், கொளத்தூர் சேலம் ஏற்காடு பகுதியிலும் மழைப்பொழிவு அமைந்தது.

இப்படி குறைந்த பரப்பில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழைப்பொழிவு 21 ஆம் தேதி வரை இருக்கும். பரவலான பரப்பினும் அதிகமழைக்கு 21 ஆம் தேதி வரைக்கும் வாய்ப்பு குறைவு.
காற்றுப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் வறண்ட வானிலையும் உண்டு வானிலை மாறி மழையும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் மாறும் எல்லாம் கலந்து இருக்கும்.

ஆழ்ந்த தாழ்வு மண்டலம் அல்லது Tej புயல் வாய்ப்பு

அதனை அடுத்து தென்சீனா கடல் பகுதி நிகழ்வு
தாய்லாந்து மியான்மர் வழியாக வங்கக் கடலுக்கு வந்து ஜூலை 20,21,22 தேதிகளில் தீவிரமடைந்து ஓடிஸா கரையை கடந்து அந்த நாட்களில் தென்மேற்கு பருவமடைய சற்று தீவிரப்படுத்தும்.
அது TEJ புயலாக மாறி
தென்மேற்கு பருவ மழையை கேரளா கர்நாடகாவில் தீவிரப்படுத்தும்.

தமிழ்நாட்டில் வெப்பச்சலன இடி மழை ஜூலை 22 க்கு மேல் காற்று பகுதிக்கும் கிடைக்கும்.

மேலும் ஜூலை 25,26,27 இல் ஒரு நிகழ்வு காத்திருக்கிறது.

ஜூலை இறுதியில் தான் தென்மேற்கு பருவமழை கூடுதல் மழை பெய்ய தென்னிந்தியாவின்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கேரளா கர்நாடகாவில் கொடுக்கும்.
அதைவிட ஆகஸ்ட் சிறந்த மழை கொடுக்கும்.

செப்டம்பர் அக்டோபர் உபரி நீர் கொடுக்கும் வகையில் மழை இருக்கும்.

படிப்படியாக குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் பொறுமை பொறுமை பொறுமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *