2023 ஏப்ரல் 22 சனிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை
இன்று சூரியனின் குத்துக்கதிர் தர்மபுரி மாவட்டத்தின் வடக்குப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்ட தெற்கு பகுதி, திருப்பத்தூர் மாவட்ட தெற்கு ஓரம், திருவண்ணாமலை மாவட்டத்தின் மையப்பகுதி,விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப்பகுதிகள், செங்கல்பட்டு மாவட்டத்தின் கூவத்தூர் , மதுராந்தகத்திற்கு தெற்கே உள்ள பகுதிகள் நண்பகலில் சூரியனின் குத்துக்கதிர் விழும், சரியாக வங்கக்கடலோரம் 12 மணி 08 நிமிடத்திற்கும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட கர்நாடக எல்லையோரம் 12 மணி 20 நிமிடத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் இடைப்பட்ட பகுதியில் இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பொருளின் நிழல் அதன் மீதே விழுந்து விடும்.
இப்படி சூரியனின் குத்து கதிர் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து ஏப்ரல் 24,25 ஆம் தேதியில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் விழும்.
ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாத நான்கு வாரங்கள் கோடை மழை
சூரியனின் குத்துக்கதிர் வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 21க்கு மேல் 26 வரை நிலவும் என்பதால் தெற்கு காற்று, தென்கிழக்கு காற்று, கிழக்கு காற்று தமிழ்நாட்டின் கேரளா கர்நாடகா ஆந்திரா எல்லையோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் காற்று குவியும் என்பதால் ஏப்ரல் 21 க்கு மேல் கர்நாடகா கேரளா ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் உள்ள மாவட்டங்கள் மாலை இரவு மழை சாதகம் தெரிகிறது.
ஏப்ரல் 22 முதல் படிப்படியாக மழை வரவலாகி அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே இடி மழை தினசரி பொழியும்.
ஏப்ரல் இறுதி நாள்களில் தென் மாவட்டங்களில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு.
ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் சராசரிக்கு கூடுதல் மழை வெயிலுக்குப் பின் ஒழுக்கத்திற்கு பின் மாலை இரவில் கண்டிப்பாக உண்டு.
ஏப்ரல் 20 க்கு மேல் மாலை இரவு மழை பொழிந்தாலும் கடும் வெயில் வாட்டி கடும் கொடுக்கும் கொடுத்து பிறகு தான் மழை பொழிவை கொடுக்கும்.
மே 22 கர்நாடக கேரள எல்லையோரம் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை உறுதி, மே 23 24 ,25 தென்கடலோரம் தவிர்த்து வடகடலோரம் , டெல்டா கடலோரம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை வாய்ப்பு உறுதி.
காற்று சுழற்சி நிலநடுக்கோட்டு பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி நகரம் என்பதால் ஏப்ரல் இறுதியில் தென் மாவட்ட கடலோரப் பகுதிக்கும் மழை உறுதி.
மே மாதம் கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.
எல் நினோ அச்சம் வேண்டாம்
பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது.
எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும்.
பருவ மழையா 6?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று17 பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும்.
அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
ந. செல்வகுமார்.
22.4.2023-4AM வெளியீடு.