பருவமழை தொடக்கத்தில் இரு புயல்கள் மழை அமைப்பு எப்படி?

2023 மே 31 புதன் அதிகாலை ஆய்வறிக்கை:

வடமேற்கு திசையில் இருந்து வெப்பத்தால் லேசாகி மேலெழுந்து வரக்கூடிய நீராவி காற்றை குளிர்விக்கும் விதமாக அரபிக்கடல் காற்று அமையும்.

இதன் காரணமாக கேரளா கர்நாடகா ஆந்திர எல்லையோர மாவட்டங்கள் தொடங்கி அனைத்து உள் மாவட்டங்கள் மற்றும் வங்க கடலோர மாவட்டங்களில் உள்பகுதி வரை மழை பொழிவு ஒதுக்கி ஒதுக்கி ஆங்காங்கே கூடுதல் பரப்பில் கிடைக்கும்.

தென் மாவட்ட பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பொழிய கடற்காற்று சாதகமாக இருக்கிறது.
இதன் காரணமாக
மேற்கு மாவட்டங்களுக்கும் கர்நாடகா ஆந்திரா எல்லையோர மாவட்டங்களுக்கும் அனைத்து உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மே 31 வரை தினசரி மழை பெய்யும்.

கடலோரம் தவிர்த்து ஆங்காங்கே மழை இருக்கும்.

டெல்டா உள் பகுதி உட்பட ஒதுக்கி ஒதுக்கி நல்ல மழை கிடைக்கும்.

டெல்டா கடலோரம் இன்று மழைக்கு வாய்ப்பு குறைவு..

வட கடலோரம் சிறிது நேரம் நல்ல மழை காற்றுடன் பெய்யும்.

டெல்டா கடலோரம்
கடலோரம் ஜூன் 1 க்கு மேல்தான் தெரிகிறது.

கோடியக்கரை, இராமேஸ்வரம் முனை பகுதியில் மே ஜூன் 2,3இல் குறைந்த நேரம் மழை தெரிகிறது.
ஜூன்2 அல்லது 3 கண்டிப்பாக கோடியக்கரை முனை இராமேஸ்வரம் உட்பட எங்கும் மழை கிடைக்கும்.

குறைவான நேரம் குறைவான மழை பொழியும்

வங்கக் கடலோர மாவட்டங்கள் உட்பட கடும் வெப்பம், புழுக்கம் நிலவும்.

C’-F’
38-100.4
39-102.2
40-104
41-105.8

அனைத்து மாவட்டங்களிலும் 100’F டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்திருக்கும்.

மேற்கு மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா விலும் வெப்பம் உயரும்.அங்கும் 98’F க்கு மேல் வெப்பம் உயரும்.

தென் மேற்கு பருவ மழை தொடங்கும் வரை வெயில் வெப்பம் புழுக்கம் தொடரும் அதே நேரத்தில் கர்நாடகா எல்லை ஓரம் கேரளா தொடங்கி படிப்படியாக அடுத்தடுத்த மணி நேரங்களில் மாலை இரவு வெப்பச்சலன இடிமழை கிழக்கு பகுதி நோக்கி முன்னேறும்.

வெயிலுக்கு பின்னர் மேற்கு மாவட்டங்கள், அனைத்து உள்மாவட்டங்கள் மதியம் மாலை இரவு ஆங்காங்கே இடிமழை கிடைக்கும்.

கடலோரம் தெற்கு காற்றின் காரணமாக முன்னேறுவதில் சிரமப்பட்டு கடலோரம் எட்டாமல் செயலிழக்கும்.
ஜூன் 2,3 இல் டெல்டா கடலோரம் மழை தரும்.
மயிலாடுதுறை வடக்கு பகுதிக்கும், தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிக்கு அதிக வாய்ப்பு.

ஜூன் முதல் வாரத்திலும் இதே வெப்ப அலை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது.

*ஜூன் 1,2,3,4
அனைத்து மாவட்டங்களிலும் மாலை இரவு மழை பெய்யும்.

ஜூன் 3 முதல் இலங்கை, குமரிக்கடல் கேரளா ஒட்டிய அரபிக்கடலில் ஒரு நிகழ்வு உருவாகி ஜூன் 3,4,5இல் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடக்கும்.

*ஜூன் 5 தேதிக்கு அரபிக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி மண்டலம், புயல், தீவிர புயல் என்ற தீவிரம் அடைந்து ஜூன் 8,9,10 இல் விலகி செல்லும்.

ஜூன் 10,11,12 தேதியில் வடக்கு வங்கக்கடலிலும் தாழ்வு உருவாகி
அரபிக்கடல் காற்றை கேரளா தமிழ்நாடு வழியாக வங்க கடலுக்கு ஈர்த்து பருவம் அடையை பருவமழை கொடுக்கும்.

அரபிக் கடலில் ஒரு புயலும் வங்கக் கடலில் ஒரு புயலும் ஒரே நேரத்தில் நீடிக்கும் என்பதால் தலா 40% காற்றை பிரித்துக் கொள்ளும் மீதமுள்ள 20% காற்று மட்டும் கேரள வழியாக மேற்கு தொடர்ச்சி மலை தமிழ்நாடு வழியாக வங்கக் கடலுக்கு பயணிக்கும் இதனால் சீரான தென்மேற்கு பருவமழை இருக்கும்.

இந்த இரு நிகழ்வுகள் செயலிழந்த பிறகு புதிய நிகழ்வு உருவாகி தென்மேற்கு பருவமழையை தீவிரப்படுத்தும்.

எல் நினோ அச்சம் வேண்டாம்

பசுபிக் பெருங்கடலில் கடல் நீரோட்டங்கள் வலுவான எல் நினோவை உருவாக்க சாதக சூழலை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் என்று பெருங்கடலில் வலுவான எல் நினோ உருவானாலும், வங்கக்கடல் வெப்பம் அரபிக்கடல் வெப்பம் நிலநடுக்கோட்டு இந்தியப்பெருங்கடல் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் , 31 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் உயர்ந்து காணப்படுகிறது. எல் நினோ கொடுக்கும் பாதிப்பை சரி செய்யும் வகையில் வடக்கு இந்திய பெருங்கடல் வெப்பம் சாதகமாக இருக்கிறது.
எல்-நினோ கவலை வேண்டாம்.

தென்மேற்கு பருவமழை 2023
குமரிக்கடல் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் தாழ்வு நிலை உருவாகி தீவிரமடைந்து கேரளா கர்நாடகா கோவா மகாராஷ்டிரா குஜராத் வடக்கு நோக்கி நகர்ந்து
தென்மேற்கு பருவமழை ஜூன் 3, 4,5ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடக்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு/ நீடித்து பருவமழை ஜூன் 4,5 க்குள் பருவமழை தொடங்கிவிடும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.

பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.

பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.

வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.

வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.

குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.

ந. செல்வகுமார்.
31.5.2023-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *