2022 டிசம்பர் 15 அதிகாலை ஆய்வறிக்கை
அரபிக்கடல் சென்ற மான்டோஸின் செயலிழந்த பகுதி தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்துள்ளது.இது லட்சத்தீவிற்கு வடமேற்கே நிலை கொண்டு உள்ளது.
டிசம்பர் 16,17 தேதிகளில் லட்சத்தீவு பகுதியை விட்டு விலகி ஆப்பிரிக்க பகுதியை நோக்கி விலகி செல்லும்.
இது மேலும் தீவிரமடைந்தாலும் எங்கும் கரை கடக்காது, கடலிலேயே ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடலோரம் நெருங்கி முற்றிலுமாக செயல் இழக்கும்.
இந்த நிகழ்வு வங்கக்கடல் காற்றை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் வழியாக ஈர்க்கிறது.
இதன் காரணமாக மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி குமரி கடல் பகுதி மாலத்தீவு பகுதி கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் வலுவான காற்று பயணிக்கும்.
கிழக்கு வடகிழக்கு குளிர்ந்த காற்று தமிழகம் தரை ஏற , நீராவியை மேகமாக மாற்ற சாதக வெப்பக்காற்று காற்று இல்லாத காரணத்தால் காற்று குளிர்ந்து மேகமாக, மழையாக மாறாமல் பனியாக பொழியும். அதிகாலை காலை நேரங்களில் மூடுபனி வரும் டிசம்பர் 17 சனிக்கிழமை வரை காணப்படும் வெயில் வந்ததும் வெப்ப சாதகம் ஏற்படும் ஓரிரு இடங்களில் மேகம் உருவாகி எங்காவது ஓரிரு இடங்களில் தூறலாம்.
டிசம்பர் 15, 16,17 இடைவெளி கிடைக்கும்.
ஓரிரு இடங்களில் கிழக்கு காற்று வருகை காரணமாக ஓரிரு இடங்களில் நனைக்கும் மழைக்கு வாய்ப்பு தெரிகிறது. உலர்த்துபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் போதும். டிசம்பர் 15 16 17 பெரும்பாலும் மழை இல்லாத வானிலை ,இரவில் பனிப்பொழிவும் காணப்படும்.
டிசம்பர் 13 தெற்குஅந்தமான் கடற் பகுதிக்கு வந்த தென் சீனக் கடல் காற்று சுழற்சி, தற்பொழுது சுமத்ரா தீவு , மலேசியா இடைப்பட்ட பகுதி மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது டிசம்பர் 17,18 தேதிகளில் மேலும் தீவிரமடைந்து, டிசம்பர் 20 க்குள் தாழ்வு மண்டலமாக வலு பெறலாம். டிசம்பர் 18 இலங்கையை தொட்டு டிசம்பர் 19 டெல்டா மாவட்ட கரையை நெருங்கி வந்து வட இலங்கை மற்றும் டெல்டா மாவட்டங்கள் இடைப்பட்ட பகுதிக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன மிக கனமழையை கொடுப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
டிசம்பர் 19 முதல் 24 வரை நிறைய மழைப்பொழிவு கொடுக்க அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின்(அரையாண்டுத்தேர்வு) இரண்டாம் பருவத் தேர்விற்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிக்கும் நல்ல மழை பொழிவு கொடுக்கும்.
டிசம்பர் 19க்குள் அடுத்த மழை தொடங்கி கிறிஸ்துமஸ் நாளிலும் மழையை கொடுத்து டிசம்பர் டிசம்பர் 26 முடிய எந்த சுற்றில் மழைப்பொழிவு உறுதியாக தெரிகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மழை இடைவெளி எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்பொழுது வருவது தாமதம் அடைவதால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் மழை பொழிவை கொடுக்கும் என்று தெரிகிறது.
இப்படி டிசம்பர் இறுதி ஜனவரி முற்பகுதி இல் ஒரு நிகழ்வும்,பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.
நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
அனைத்து ஏரி குளங்களும் நிரம்பும் பெய்ய வேண்டிய மழை தாமதமாக பொழிய காத்திருக்கிறது. கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.