இந்த நிகழ்வால் டிசம்பர் 31 முடிய மழை வானிலை.உங்களுக்கு எப்படி?

2022 டிசம்பர் 19 திங்கட்கிழமை இரவு 7 மணி ஆய்வறிக்கை:

தாழ்வுப்பகுதி இலங்கையை நெருங்கி விட்டது.

நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுக்கு தெற்குப்புறம் , தென் அரைக்கோள தீவிர நிகழ்வு புயல் வழக்கத்திற்கு மாறாக வட துருவ குளிரலையை ரஷ்யா, மங்கோலியா, சீனா ,தைவான் ,பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா ,லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் ,மலேசியா ஆகிய நாடுகள் வழியாகவும் பசுபிக் பெருங்கடல் தென்சீனக்கிடல், தாய்லாந்து வளைகுடா வழியாகவும் அந்தமான் கடற் பகுதி வந்து பிறகு இலங்கை அருகே நீடித்துக் கொண்டிருக்க கூடிய தாழ்வு பகுதிக்கு வந்து நிலநடுக் கோட்டிற்கு தெற்கு புறம் நீடிக்கும் Dariyan cyclone க்குள் செல்கிறது.

இதனால் இலங்கை அருகே நிலை பெற்றிருக்கும் தாழ்வு பகுதிக்கு மிகுந்த வடதுருவ குளிர் காற்று வருவது மட்டுமல்லாமல் நிலநடுக்கோட்டுப் பகுதி வெப்பநீர் ஆவி காற்று இலங்கை தாழ்வு பகுதி கிடைக்கவில்லை. டிசம்பர் 20 நிலநடுக்கோட்டு தெற்கே உள்ள நிகழ்வு விலகி செல்லும் என்பதால் நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள வெப்பநீராவி கிடைக்க பெறும். பிறகு கிறிஸ்மஸுக்கு பின் வட துருவக் குளிரலை வருகை தடைபடும்.

இதனால் இந்நிகழ்வானது கிறிஸ்துமஸ் தின பிற்பகல் முதல் தீவிரமடைந்து இலங்கை கரை கடந்து தென்தமிழகம் அல்லது குமரி கடல் வழியாக அரபிக் கடலுக்கு பயணிக்கும்.

மழை எதிர்பார்ப்பு

டிசம்பர் 19 திங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும்தென் மாவட்டங்கள் கடலோர பகுதிகளில் மழை தொடங்கியது. வேதாரண்யம் ஒன்றியம் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய கடலோரப் பகுதிகளில் இன்று மதியம் மாலை மிதமானது முதல் சற்று கன மழை பொழிந்தது. இப்பொழுதும் விட்டு விட்டு மழை பொழிகிறது.

தென் தமிழகத்தின் கன்னியாகுமரி,தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பொழிவு தொடங்கியது.

டெல்டாவின் பிற பகுதிகளிலும் தென் மாவட்டத்தில் ஆங்காங்கே தூறல் மழை காணப்படுகிறது.

டிசம்பர் 20 21 22 23 செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி ஆகிய தினங்கள் நிலநடுக்கோட்டு வெப்ப நீராவி காற்று ஓரளவு கிடைக்கும் , அதே நேரத்தில் வட துருவ குளிரலை நிகழ்வுக்கு வந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக குளிர்ச்சியான வானிலை காணப்படும், கடலோரம் அதிகாலை மழைப்பொழிவு காணப்படும். மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் வடகடலோரம் காலை 11 மணிக்கு மேல் மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை கொடுக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 20 21 22 23 ஆகிய தினங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை இருக்கும் ஆனால் பெரும்பாலும் மதியம் மாலை இரவு நேரங்களில் இருக்கும். அதிகாலை காலை நேரங்களில் கடும் குளிர் நிலவும். கடலோரம் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் குளிருக்கு இடையே மழை பொழிவு இருக்கும்.

டிசம்பர் 24 25 ஆகிய தேதிகளில் மதிய மாலை இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவை கொடுக்கும்.
டிசம்பர் 20 முதல் 31 வரை வடஉள் மாவட்டங்களுக்கும் கர்நாடக எல்லையோரம் ஆந்திர எல்லையோரம் வரை ஆங்காங்கே ஆங்காங்கே மிதமான மழை கொடுக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா வரை மழைப்பொழிவு கிடைக்கும்.

வட உள் மாவட்டங்களை விட மத்திய உள் மாவட்டங்கள் நல்ல மழை பொழிவு பெறும்.
அதைவிட டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவு பெறும்.

தீவிரமடைந்து கரை கடக்கும் வாய்ப்பு:

டிசம்பர் 25 பிற்பகல் புதிய சாதாரண காற்று சுழற்சி இலங்கை அருகே நீடிக்கும் நிகழ்வுடன் வந்து இணையும் என்பதாலும், டிசம்பர் 25 பிற்பகல் முதல் வட துருவ குளிரலை தாய்லாந்து வளைகுடாவில் நீடிக்கும் தாழ்வு நிலையுடன் நின்று விடும் என்பதாலும், நில நடுக்கோட்டு நிகழ்வு விலகி சென்று இருக்கும் என்பதாலும், வட துருவ குளிரலை வருகை தடைபடும், அதே நேரத்தில் நிலநடுக்கோட்டு வெப்பநீர் ஆவி கிடைக்க பெறும் இதன் காரணமாக டிசம்பர் 26 தேதிகளில் இலங்கைக்கு கிழக்குப் பகுதியில் தாழ்வு பகுதி தீவிரமடைந்து, டிசம்பர் 26, 27 தேதிகளில் இலங்கை கடந்து மன்னார் வளைகுடா, தென்தமிழகம் வழியாகவோ ,குமரி கடல் வழியாகவோ அரபிக்கடலை நோக்கி நகரும் இதனால் தமிழகத்தில் மழை பொழிவு மீண்டும் தீவிரமடையும், குறிப்பாக இலங்கை தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நல்ல மழை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 28 அரபிக் கடலை அடைந்து ஜனவரி 2 வரை கிழக்கு காற்றை ஈர்த்து மதியம் மாலை இரவு மழைப்பொழிவை ஆங்காங்கே ஆங்காங்கே கொடுக்கும்.

ஜனவரி 3 முதல் 5 வரை இடைவெளி கிடைக்கும். ஜனவரி 7 இல் புதிய நிகழ்வு வந்து ஜனவரி 14 வரை மழை பொழிவை தரும்.

ஏற்கனவே சென்னை அருகே தாழ்வு பகுதி நவம்பரில் வந்த போது இதே குளிர் அலை நுழைந்து சென்னையை ஊட்டி போல குளிர் ஆக்கியது. ஆனால் அந்த குளிர் விலகி அடுத்து மான்டோஸ் வந்தது. குளிரலை இடைக்கால இடையூறு மட்டுமே ,இருந்தபோதிலும் மழை பொழிவு இருக்கும். குறைவாக பொழியும். மீண்டும் டிசம்பர் 25 க்கு மேல் தீவிரமடைந்து மழை பொழிவை கொடுக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்.
தற்போதுள்ள நிகழ்வால் ஜனவரி 2 வரை மழை பொழிவு கிடைக்க, அடுத்த நிகழ்வால் ஜனவரி 6 முதல் 14 வரை மழைப்பொழிவு கிடைக்க, அதற்குப் பிறகும் நிகழ்வுகள் தென் மாவட்டங்கள் இலங்கைக்கு மழை பொழிவு கொடுக்க ஜனவரி 20 வரை மழைப்பொழிவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு திட்டமிட்ட வேளாண்மை செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
ந.செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *