தாழ்வு பகுதி தீவிரமாகும்.வழித்தடம் எது? மழை எங்கே? எப்போதும்?

2022 டிசம்பர் 20 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை


நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் சுமத்திரா தீவு இடைப்பட்ட பகுதிகளில் உருவான தாழ்வுப்பகுதி இலங்கையை நெருங்கி வருகிறது.
டிசம்பர் 20 21 22 23 24 25 ஆகிய தேதிகளில் படிப்படியாக நெருங்கி இலங்கையின் வடக்கு பகுதியை அடையும்.

டிசம்பர் 25 பிற்பகல் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து, மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதியை டிசம்பர் 26 அடைந்து தாழ்வு மண்டலமாக தீவிரமடையும், இது டிசம்பர் 27 குமரிக்கடல் பகுதியில் மேற்கு நோக்கி பயணித்து டிசம்பர் 28 லட்சத்தீவு பகுதியை சென்றடையும்.

தென் அரைக்கோள புயலுக்கு வடதுருவக் குளிரலை வர, இலங்கை நெருங்கும் தாழ்வுப்பகுதி வட துருவ குளியலையை தன் பக்கம் ஈர்த்து திருப்பி அனுப்பும் கட்டுப்பாட்டாளராக அமைந்துள்ளது.

இதனால் இலங்கை அருகே நீடிக்கும் தாழ்வு பகுதிக்கு வட துருவ குளிரலை மட்டுமே கிடைக்கிறது.

நெருங்கி வரும் பொழுது கடலோர மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களுக்கும் ஓரளவிற்கு வெப்பநீர் ஆவி கிடைக்கும். இதனால் கடலோர மாவட்டங்களில் கடலோர பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் நல்ல மழை பொழிவை பெறும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே நல்ல மழை பொழிவு பெறும்.

உள் மாவட்டங்களில் பகல் வெப்பம் உயரும் பொழுது ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி மழை பொழிவு கொடுக்கும்.

இந்த நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வின் தெற்கு பகுதியை அடையும் பொழுது லேசான காற்றுடன் கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் நல்ல மழை பெறும்.

உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மிதமான மழை பொழியும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மலை பகுதிகளில் கணவாய் பகுதிகளில் மிதமான காற்று கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி பயணிக்கும். அதே நேரத்தில் மழை மாவட்டங்களில் மிதமான மழை பொழிவும் இருக்கும்.

டிசம்பர் 27 குமரி கடலில் மேற்கு நோக்கி பயணிக்கும் என்பதால் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி கடலோரம், திருநெல்வேலி கடலோரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை வாய்ப்பு தெரிகிறது.

ஒக்கி புயல் போல இலங்கை கடந்து குமரி முனைக்கு தெற்கு புறமாக லட்சத்தீவு பகுதியை நோக்கி பயணிக்கும். ஆனால் இது இப்பொழுது வரை தாழ்வு மண்டலம் வரை மட்டுமே தீவிரமடையும் என்று தெரிகிறது.

டிசம்பர் 26 27 28 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் ,மத்திய உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் லேசான காற்றுடன் மழை பொழிவு இருக்கிறது.

டிசம்பர் 28 லட்சத்தீவு பகுதிக்கு சென்று கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால் டிசம்பர் 29 30 31 தேதிகளில் தமிழகத்தில் ஆங்காங்கே மதிய மாலை இரவு மழை வாய்ப்பு தெரிகிறது.

கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் மன்னர் வளைகுடா, குமரி கடல் ,தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலும் டிசம்பர் 26 27 28 தேதிகளில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ந.செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *