தாழ்வு மண்டலம் டிசம்பர் 25,26,27 இல் அதிக மழை தருவது எங்கே?

2022 டிசம்பர் 23 அதிகாலை ஆய்வறிக்கை

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்திற்கு நேர் கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. கரை கடக்கும் இடமாகிய முல்லைத்தீவு திரிகோணமலை பகுதிக்கு கிழக்கு வட கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது டிசம்பர் 24 சனிக்கிழமை காலை வரை மிகவும் மெதுவாக வடக்கு நோக்கி முன்னேற பார்க்கும் பிறகு முடியாமல் திசை மாறி மேற்கு தென்மேற்கு திசை நோக்கி திரும்பி வட இலங்கை கரையை டிசம்பர் 25 பிற்பகல் அடையும்.

டிசம்பர் 23,24 தேதிகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விட்டு விட்டு மழை இருக்கும்.டிசம்பர் 23 தேதிகளில் மேலும் சற்று வடக்கு நோக்கி நகரும் என்பதால் நேற்று முன் தினம் போல் வேதாரண்யம் பகுதியில் மழை இருக்காது மிகவும் குறைவாக தூறல் நனைக்கும் மழை வாய்ப்பு . இன்று ஒரு நாள் மற்றும் நாளை முற்பகல் மழை விலகியது போல் இருக்கும்

டிசம்பர் 24 தென்மேற்கு திசை நோக்கி திரும்பி வட இலங்கை பாக்ஜல சந்தி அருகே நெருங்கி வந்து அமையும்.

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று தாழ்வு மண்டலமாக வட இலங்கை வழியாக கரை கடந்து நன்கமைந்த காற்றெடுத்த தாழ்வு பகுதியாக செயலிழந்து இலங்கையின் மேற்கு பகுதியை அடைத்து மன்னார் வளைகுடா வழியாக நகர்ந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து குமரிக்கடல் வழியாக அரபிக் கடலுக்கு செல்லும்.

டிசம்பர் 24 சனிக்கிழமை நள்ளிரவு திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாரல் காற்றுடன் மழை பொழிவு தொடங்கும்.


டிசம்பர் 25 அதிகாலை முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் கனமழை காத்திருக்கிறது.
மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. கர்நாடக எல்லையோரம் ஆந்திர எல்லை வரும் வரை ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். வடகடலோரம் கூட நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 28 29 தேதிகளில் அரபிக்கடலில் சென்று கிழக்கு காற்றில் இருக்கும் என்பதால் மழை பொழிவு டிசம்பர் 29 வரை ஆங்காங்கே ஆங்காங்கே தொடரும்.

டிசம்பர் 25 நிகழ்வு நெருங்கி கரை ஏறும் வரை நல்ல மழை பொழிவை கொடுக்கும். பிறகு
நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் அல்லது இரவு இலங்கை தரை ஏறி நிற்கும் பொழுது தீவிரம் குறைந்து இருந்தாலும் மன்னார் வளைகுடாவில் இறங்கி குமரி கடல் செல்லும் வரை நிறைய மழைப்பொழிவு வாய்ப்பு இருக்கிறது.
நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்.

டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் லேசான மிதமான காற்று இருக்கும். காற்று அச்சம் வேண்டாம் .தீவிர தாழ்வு பகுதி இலங்கை கடந்து மன்னார் வளைகுடா கடந்து குமரி கடல் வழி அரபிக்கடல் செல்லும் என்பதால் வடகிழக்கு கிழக்கு காற்றின் நுழைவு இருக்கும் . மழைக்கு முன் தொடங்கும் லேசான காற்றை கண்டு துளியும் அச்சப்பட வேண்டாம்.

ந.செல்வகுமார்.

ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *