காற்று சுழற்சி நகர்வும்,வரும் நாள்கள் வானிலையும் அறிக்கை

02.01.2023 திங்கள் அதிகாலை ஆய்வறிக்கை.

சுமத்திரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவாகி இருக்கிற காற்று சுழற்சி மெல்ல மேற்கு நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது

இதன் காரணமாக ஜனவரி 3 முதல் கிழக்கு காற்று தமிழகத்தில் நுழைந்து ஜனவரி 3 முதல் குளிர் பனிப்பொழிவு மற்றும் மேகமூட்டத்துடன் வானிலையை உருவாக்கும்.

ஜனவரி 3 கடலோர மாவட்டங்களில் மதியம் மாலை தூறல் நனைக்கும் மழை வாய்ப்பு.

ஜனவரி 6 முதல் தென் இலங்கைக்கு நல்ல மழை கொடுத்து , வட இலங்கைக்கு அவ்வப்பொழுது மிதமான மழை பொழிவை கொடுத்து ,தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நனைக்கும் மழை அல்லது தூறல் மழையை கொடுக்கும்.

பசிபிக் பெருங்கடலின் நிகழ்வு ஜனவரி 8,9 தேதிகளில் அந்தமான் கடற்பகுதிக்கு வந்து ஜனவரி 10 11 12 13 தேதிகளில் இலங்கைக்கு மழை கொடுக்கும் வகையில் அமைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை தரும். அதே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே மழை கொடுக்க வாய்ப்பு தெரிகிறது.

இந்த காற்று சுழற்சி போராடி பொங்கல் வரை தமிழகத்தை நெருங்கும்.

இதன் காரணமாக ஜனவரி 3 க்கு மேல் டெல்டா கடலோரம் தென்கடலோரம் குழப்பமான வானிலை மேகமூட்டம் இருக்கும்.

ஜனவரி 5 முதல் இலங்கையில் ஆங்காங்கே நனைக்கும் மழை காணப்படும்.

ஜனவரி 8ககு மேல் 14 க்குள் இலங்கை நெருங்கக்கூடிய தாழ்வு அமைவு தமிழகத்திற்குள் எந்த அளவிற்கு முன்னேறி மழை பொழிவை கொடுக்கும் என்பது ஆய்வில் உள்ளது.

வட துருவத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைந்த அழுத்த பனிப்புயல் வட துருவ நாடுகள் அனைத்தையும் பாதிப்படையை செய்திருக்கிறது. குறிப்பாக கனடா அமெரிக்கா ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் வடகொரியா தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத குளிர் காற்று வரலாறு காணாத பனிப்பொழிவு காரணமாக மாதக்கணக்கில் அனைத்தும் முடங்கி இருக்கிறது.

வடக்கு பசுபிக் பெருங்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய இரு வேறு பகுதிகளில் உருவாகும் உயர் மற்றும் தாழ்வு அழுத்தங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தொடங்கி மெக்சிகோ வளைகுடா ஒட்டி உள்ள அமெரிக்க மாகாணங்களில் உறைந்து இருக்கக்கூடிய பனிப்பொழிவை வெள்ளப்பெருக்காக மாற்றும் அளவிற்கு வானிலை மாறி அமையும் மேலும் மழையுடன் கூடிய பனிப்பொழிவு வானிலை அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா தொடங்கி நியூயார்க் வாஷிங்டன் கனடாவின் ஒட்டாவா வரைக்கும் வெள்ள பாதிப்பு தெரிகிறது.

அதேபோல் மத்திய தரைக் கடல் பகுதி மேற்கத்திய இடையூறு இமயமலை வரும் வழியில் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் அருகில் இருக்கக்கூடிய அரபுநாடுகளின் பனிப்பொழிவுக்கிடையே கனமழை வாய்ப்பு தெரிகிறது. இதில் சவுதி அரேபியாவின் மெக்கா மதினா ஜெட்டா ரியாத் குவைத் ஈராக் ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஜனவரி 2 முதல் 7 வரை அதிகம் மழை பொழிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குளிர் காற்று தான் பசிபிக் பெருங்கடல் தென் சீனக்கடல் தாய்லாந்து வளைகுடா வழியாக தென் அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா வரை பயணிக்கிறது.

இந்தக் குளிர் காற்று வங்கக்கடலிலும் இந்த ஆண்டு இரண்டு முறை நுழைந்து மழை பொழிவின் வழக்கமானகுணத்தையும் தீவிர தன்மையையும் நகர்வையும் மாற்றி அமைத்தது.

2023 ஜனவரி 16 முதல் 24 வரை இடைப்பட்ட காலத்தில் தென் இலங்கை குமரிக்கடல் மாலத்தீவு பகுதிக்கு நிகழ்வு வர வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நெருங்குவது உறுதி அது தமிழகத்திற்கு மழை பொழிவை எந்த அளவிற்கு கொடுக்கும் .எந்த அளவிற்கு முன்னேறும் என்பதை வரக்கூடிய நாள்களில் உறுதிப்படுத்தலாம்.

நம்முடைய துல்லிய வானிலை (அதிகாலை இரவு இரு நேரங்கள்) அறிக்கையை ஆண்டு முழுவதும் பார்த்து திட்டமிட்ட துல்லிய வேளாண்மை செய்து லாபம் அடையுங்கள்.

ந. செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *