ஜன 23 குளிர் மழை எங்கெங்கே? அடுத்தடுத்த நாள்கள் எங்கெங்கே? எப்படி?

இரவு அதிகாலை குளிர் மார்ச் முதல் வாரம் வரை தொடரும்.
ஜனவரி 23 முதல் குளிர்மழை.
ஜனவரி 27 முதல் மிதமான மழை அறுவடைக்கு ஆலோசனை

2023 ஜனவரி 20 அதிகாலை ஆய்வறிக்கை

ஜனவரி 23 முதல் அறுவடைக்கு மழை இடையூறுகள், மழை குறுக்கீடுகள் இருக்கும். அனைத்து மாவட்ட அறுவடை விவசாயிகள் அறிந்து திட்டமிட வேண்டும்.

ஜன 23 அடுத்த வாரம் முதல் ஆங்காங்கே ஆங்காங்கே குளிருக்கு இடையே மழை பொழிவு. ஜனவரி 23 முதல் தென் மாவட்டங்கள் உறுதி. ஜனவரி 24 முதல் டெல்டா மாவட்டங்கள் உறுதி.ஜனவரி 25,26 அனைத்து மாவட்டங்கள் உறுதி. ஜனவரி 27 முதல் பரவலாகி கனமழை வாய்ப்பு.அறுவடை விவசாயிகள் வானிலை அறிக்கையுடன் இணைந்து திட்டமிட்டு அறுவடை செய்க.

மேற்கத்திய இடையூறு
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் மேற்கத்திய இடையூறு காஷ்மீர் இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட் சிக்கிம் ஆகிய இந்திய மாநில பகுதிகளுக்கும், அண்டை நாடான நேபாளம் பூட்டான் பகுதிகளுக்கும் பனி மழை பொழிவு, கடும் குளிர் காற்று , உறைபனியை உருக செய்யும் மழை வரக்கூடிய வாரத்தில் அமையும். இது பஞ்சாப் ஹரியானா டெல்லி உத்திரப்பிரதேசம் பீகார் சண்டிகர் போன்ற பகுதிகளுக்கும் வரும் வாரம் மழை பொழிவை கொடுக்கும். அதே நேரத்தில் பனிச்சரிவையும் ஏற்படுத்தலாம்.

குளிர் மற்றும் மழைக்கு செட்டாகும் செட்டிங்

மேற்கத்திய இடையூறு, இந்திய நிலப்பகுதி உயர் அழுத்தம்,வட இந்திய நிலப்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் காற்று சுழற்சி ,இவைகளுக்கு இடையே வெப்ப குளிர் காற்று சதவீதம் சரியாக அமைந்து தமிழ்நாட்டின் கர்நாடக ஆந்திர கேரளா எல்லையோரம் வரை ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி அவ்வப்பொழுது அருகருகே கூடுதல் குறைவாகவும் மழை பொழிவிற்கு சாதக அமைப்பு அமைகிறது.

குளிருக்கு இடையே அனைத்து மாநிலங்கள் மழை
வட இந்திய நிலப்பகுதி காற்று சுழற்சி இலங்கை காற்று சுழற்சியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு குமரி முதல் காஷ்மீர் வரை, குமரி முதல் அருணாச்சல் பிரதேசம் வரை
அனைத்து இடைப்பட்ட மாநிலங்களுக்கும் ஓரிரு நாள் கனமழை வாய்ப்பை கொடுக்கும்.
கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு சில நாட்கள் நல்ல மழை தெரிகிறது.

தமிழ்நாட்டில் குளிர் மழை
ஜனவரி 23 24 டெல்டா கடலோரம் தென்கடலோரம் , தென் மாவட்டங்கள் நனைக்கும் மழை வாய்ப்பு.
தென் கடலோரம் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு.

ஜனவரி 23 24 ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி கடலோரம் மழை உறுதி. தெற்கு டெல்டா புதுக்கோட்டை கடலோரம் கூடுதல் வாய்ப்பு.

ஜனவரி 25 26 தேதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே சற்று கூடுதல் பரப்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மழை வாய்ப்பு தெரிகிறது.
குடியரசு தின கொண்டாட்ட நேரத்தில் காலை கடலூர் புதுச்சேரி மயிலாடுதுறை காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களுக்கு தூறல் மழை வாய்ப்பு தெரிகிறது.
கண்டிப்பாக ஜனவரி 25 26 மதியம் பரவலாக மழைக்கு வாய்ப்பு.

ஜனவரி 25 26,27 மற்றும் பிப்ரவரி 3 4 சுபமுகூர்த்தம் மற்றும் இல்லம் குடிபுகு விழா நாள்கள் வானிலை:
மேற்கண்ட நாள்களில் மழை குழப்பும் ,குளிர் நீடிக்கும் ,பாதிக்கும் மழையாக இருக்காது. குழப்ப வானிலை நீடிக்கும் .மழையே பெய்தாலும் சில நிமிடங்களில் விலகி விடும். அச்சம் வேண்டாம்.
குளிர் மிகுந்து காணப்படும்.

பரவலாகவும் மழைப்பொழிவு
ஜனவரி 27 முதல் பரவலான மழை பொழிவிற்கும் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பாதிக்கும் மழையாக இருக்காது. ஆனால் ஜனவரி 27 க்கு மேல் சற்று கனமழை வாய்ப்பு
அறுவடை செய்தபின் வைக்கோல் சேமிப்பதில் உலர்த்துவதில் இடையூறு செய்ய வாய்ப்பிருக்கிறது.

அறுவடை நாளை குறிப்பதில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும். மழை பொழிவு தொடர்ந்து பெய்யாது. மழை குறிக்கீடு இருக்கும் .குழப்பம் அதிகம் இருக்கும். ஆங்காங்கே ஆங்காங்கே கூடுதல் மழைக்கு வாய்ப்பு தெரிகிறது.
அச்சமின்றி,இடைவெளி அறிந்து ,அறுவடை செய்க.

ந. செல்வகுமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *