2023 பிப்ரவரி 4 அதிகாலை ஆய்வறிக்கை
பிப்ரவரி 4 இன்று முடிய மழை வாய்ப்பு உள்ளது
தானியங்களை மூடி பாதுகாத்திடுங்கள்.
விளக்க அறிக்கை
தாழ்வு மண்டலம் 4.2.23 அதிகாலை 4 மணி நிலவரம்
தாழ்வு அமைப்பு எங்கே?
இலங்கை கடந்து மன்னார் வளைகுடா இறங்கிய தீவிர தாழ்வுப்பகுதி இலங்கையை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதி வழியாக இணைப்பு சுழற்சியின் ஈர்ப்பின் காரணமாக நிலநடுக்கோட்டு பகுதியில் நீடிக்கிறது.
இணைப்பு சுழற்சியுடன் இணைந்து நிலநடுக்கோட்டுக்கு தெற்கே செல்லக்கூடிய காற்றை இலங்கைக்கு தெற்கு தென் மேற்கே நீடிக்கும் காற்று சுழற்சி தமிழக தரை மீது காற்று ஏற்றும் வகையில் கட்டுப்பாட்டமைப்பாக செயல்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு காற்று சுழற்சி படிப்படியாக இலங்கைக்கு தெற்கு புறம் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கும் என்பதால் தரையேறும் காற்று படிப்படியாக விலகும். இதன் காரணமாக மழையும் படிப்படியாக விலகும்.
தாழ்வு அமைப்பு எங்கே?
இலங்கை கடந்து மன்னார் வளைகுடா இறங்கிய தீவிர தாழ்வுப்பகுதி இலங்கையை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதி வழியாக இணைப்பு சுழற்சியின் ஈர்ப்பின் காரணமாக நிலநடுக்கோட்டு பகுதியை நோக்கி நகர்கிறது.
பிப்ரவரி 4 இன்றுடன் படிப்படியாக விலகும் மழை உங்கள் பகுதியில் விலகும் நேரம் எது?
நேற்று இரவு முழுவதும் டெல்டாவில் பரவலாக பெய்த மழை காலையும் தொடரும் நிலையில் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
வேட்டைக்காரன் இருப்பு ,வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ,புஷ்பவனம் ,செம்போடை அவரைக்காடு, தலைஞாயிறு, ஓரடியம்புலம், உம்பளச்சேரி ,தலைக்காடு ,பாமணி, பிராந்தியாங்கரை கரியாபட்டினம், மேலமருதூர் , பிச்சன் கோட்டகம் தென்பாதி, தாணிக்கோட்டகம், துளசியாப்பட்டினம் அண்ணா பேட்டை பகுதி வரை காலையில் கனமழை கொடுத்தாலும் அங்கும் நீடித்து நின்று பெய்யாது.
கடலூர் மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூரில் காலை 10 மணிக்கு மேல் மழை விலகும்.
தஞ்சாவூர் வடக்கு, திருவாரூர் வடக்கு, நாகப்பட்டினம் வடக்கு ஓரம், காரைக்கால் பகுதிகளில் நண்பகல் விலகும்.
தஞ்சாவூர் மத்திய பகுதி, திருவாரூர் மத்திய பகுதி, நாகப்பட்டினம் மத்திய பகுதி, திருச்சி மத்திய பகுதி மதியம் 2:30 மணிக்கு பிறகு விலகும்.
தஞ்சாவூர் தெற்கு பகுதி, திருவாரூர் தெற்கு பகுதி, நாகப்பட்டினம் தெற்கு பகுதி, புதுக்கோட்டை மாவட்ட வடக்கு பகுதி மாலை 5 மணிக்குள் விலகும்.
புதுக்கோட்டை தெற்கு பகுதி, திருச்சி மாவட்ட தெற்கு பகுதி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகள், திருப்பூர் மாவட்ட தெற்கு ஓரம் கோயமுத்தூர் மாவட்ட வரும் ஓரம் , சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்ட பகுதிகளில் முன் இரவு விலகும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி விருதுநகர் மாவட்டம் மேற்கு ஓரம், தேனி ஆகிய மாவட்ட பகுதிகளில் நள்ளிரவு மழை விலகும்.
கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி மாவட்ட கேரள எல்லை ஓரம் பிப்ரவரி 5 ஞாயிறு அதிகாலை விலகும்.
டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும்.
தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பிப்ரவரி 4 இன்று இரவுடன் மழை நிறைவடையும்.
இன்றைய மழை ஒரு சில இடங்களில் சற்று கனமாக இருந்தாலும் அச்சுறுத்தும் வகையில் மட்டுமே இருக்கும் பாதிக்கும் மழையா இருக்காது.
அறுவடை செய்வது எப்போது?
பிப்ரவரி 4 இரவு மழை முற்றிலும் விலகும் என்பதால் பிப்ரவரி 4 க்கு பிறகு காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம். அச்சம், பீதி வேண்டாம்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
தாழ்வு சுழற்சி இலங்கைக்கு தென் மேற்கு பகுதியில் நீடிப்பதால் இலங்கையின் ஒட்டுமொத்த பகுதிக்கும் பிப்ரவரி 4 வரை பரவலான மழைப்பொழிவு உண்டு. பிப்ரவரி 5 இலங்கையின் தெற்கு பகுதியில் தென்கிழக்கு பகுதியில் மழை தொடரும். இலங்கையின் தெற்கு பகுதியிலும் இலங்கையில் பிப்ரவரி 6 மழை விலகும். இலங்கையில் பிப்ரவரி 6 முதல் உலர்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.
பிப்ரவரி 8,9 இல் குழப்பும் மேகமூட்ட வானிலை மற்றும் பிப்ரவரி மார்ச் வானிலை அறிக்கை.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தொடங்கிய அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து இலங்கைக்கு தெற்கே நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்ச்சியாக பிப்ரவரி மார்ச் மாதங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் சரியாக வெப்ப நீராவி, குளிர் நீராவி, வெப்பம், குளிர், இந்த செட்டிங் சரியாக செட்டாகும் பொழுது அவ்வப்பொழுது மழை கொடுக்கும்.
அதன் அடிப்படையில் பிப்ரவரி 8 ,9 தேதியில் மேலும் ஒரு காற்று சுழற்சி இலங்கை நெருங்கும் என்பதால் தூறல் மழை குழப்பமான வானிலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் முன் எச்சரிக்கைக்கு மட்டுமே.
பிப்ரவரி 5 முதல் தொடங்கும் லேசான மிதமான வெயில் காரணமாக காய்ந்த பிறகு அறுவடை செய்து மீட்டெடுக்க திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஏப்ரல் மே கோடை மழை
ஏப்ரல் மே கோடையில் நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகி வடக்கு நோக்கி அடுத்தடுத்து பயணிக்கும் . இதனால் வாட்டும் வெயிலுக்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. கோடை மழையும் இடி மழையாக சராசரிக்கு கூடுதலாக தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை 2023
தென்மேற்கு பருவமழை மே 29 30 31ஜூன் 1 2 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
அதற்கு முன்பே பருவமழை போல் வலுவான மழை பொழிவு முன் பருவ கோடை இடிமழை பொழிந்து கொண்டு இருக்கும். பருவ மழையா ?கோடை மழையா? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு நீடித்து பருவமழை ஜூன் 2க்குள் பருவமழை தொடங்கிவிடும்.
நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பான தென்மேற்கு பருவமழை கொடுக்கும் நிலையில் ஜூன் முதல் வெப்ப சலனமழை தமிழ் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக இருக்கும்.
பாலக்காடு கணவாய் , ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் உள் காற்று பகுதியில் காற்றின் வேகம் குறைவாகவும் மழை பொழிவு வழக்கத்திற்கு சற்று கூடுதலாகவும் இருக்கும்.
பாலக்காடு கணவாய் நுழைவாயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடக்கத்தில் சீறற்ற மழை இருந்தாலும்
ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் சேர்த்து மழை பொழிவை கொடுக்கும் அளவிற்கு தாமத மழை பொழிவு இருக்கும். அதற்கு முன் கோடை மழை முன் பருவ மழை சிறப்பாக பொழிந்து இருக்கும். செப்டம்பர் அக்டோபரில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கணவாய் பகுதிகளில் கூடுதல் மழை பொழிவு தெரிகிறது.
வட இந்தியாவில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவும், தென்னிந்தியாவில் செப்டம்பர் அக்டோபரில் சராசரிக்கு மிகுதியான மழை இருக்கும். தென்மேற்கு பருவமழை புள்ளிவிவரத்தில் செப்டம்பர் 30 நிறைவடைந்தாலும், தென்மேற்கு பருவமழை அக்டோபரில் வலுத்து காணப்படும்.
தென்மேற்கு பருவமழை பின்வாங்குவது தாமதம் ஏற்பட்டு. அக்டோபர் மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து தாமதமாக பின்வாங்கும்.
வடகிழக்கு பருவமழை 2023
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 28 29 30 31 ஏதேனும் ஒரு நாளில் தொடங்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் சராசரிக்கு மிகுதியான மழை பொழிவு வலுவான நிகழ்வுகளால் கொடுக்கும்.
வரும் நவம்பர் டிசம்பரில் பனிப்பொழிவு இடையூறு மிகவும் குறைவாக இருக்கும்.
நவம்பர் டிசம்பர் மாதங்களில் 100% உறுதியாக சராசரிக்கு மிகவும் மிகுதியான மழைப்பொழிவு அமையும்.
குளிர் இடையூறு இந்த ஆண்டு போல் இருக்காது என்பதால் 2023 வடகிழக்கு பருவமழை 2024 ஜனவரியிலும் தொடர வாய்ப்பு.
ந. செல்வகுமார்.
4.2.2023-4AM வெளியீடு.