2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை

12.5.2024-4AM வானிலை தகவல் :

2024 கோடை மழையும் பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

மே கோடை வானிலை.
அனல் விலகி,வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பொழிவை கொடுத்து வரும் நிலையில் மே 14 முதல் 20 முடிய காற்று சுழற்சி மழையும், மே 21 முதல் 26 முடிய வங்கக்கடலில் Remal புயல் உருவாகி தென்மேற்கு பருவமழை போல மழையும் மே 27 முதல் 31 முடிய மேலும் ஒரு காற்று சுழற்சியும் மழையும் கொடுக்கும்.

மே 12,13 எதிர்பார்ப்புகள்.
அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஆங்காங்கே பெய்துகொண்டுள்ள கனமழை.
கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில்
கூடுதல் பரப்பில் பொழியும்.அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே பொழியும்.

மே 14 முதல் 20 முடிய எதிர்பார்ப்பு.
மே 14,15 தேதிகளில் நெருங்கும் மேலடுக்கு கீழடுக்கு காற்று சுழற்சிகள் மே 20 முடிய மதியம், மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் ஒதுக்கி ஒதுக்கி பொழிந்து ஒதுக்கிய இடங்களுக்கும் அடுத்தடுத்த மணிநேரங்களில் அடுத்தடுத்த நாள்களிலும் நல்ல மழை பொழியும். இந்த நாள்களில் ஒரிரு இடங்களில் அதிகன மழை, ஆங்காங்கே கன மிககன மழை பொழியும். பரவலாக மிதமான மழை முதல் சற்று கனமழை வரை பொழியும்.

மே 21 முதல் 26 முடிய Remal புயல் எதிர்பார்ப்பு
*வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவாகும் காற்று சுழற்சி தாழ்வு பகுதி, மண்டலம், ஆழ்ந்த தாழ்வு என்று தீவிரமடைந்து Remal என்ற பெயர்கொண்ட புயலாகி , தீவிர, மிகத்தீவிர புயல் வரை தீவிரம் அடைந்து வடக்கு ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வங்கதேசம் கடக்கும்.
இதனால் தென்மேற்கு பருவமழை போல மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பொழியும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கு காற்று பலமாக வீசி ஆங்காங்கே மழை இருக்கும்.

மே 27 முதல் 31 முடிய எதிர்பார்ப்பு.

மே இறுதியில் தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

தென்மேற்கு பருவமழை 2024

ஜூன் 1, 2 தேதிகளில் அரபிக்கடல் தாழ்வு பகுதியால் பருவ மழை தொடங்கும்.
அது ASNA புயலாகி மகாராஷ்டிரா அல்லது குஜராத் கடக்கும்.
அடுத்து ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரம் DANA என்ற புயல் அரபிக்கடலில் உருவாகி கோவா, மகாராஷ்டிரா,கடக்க வாய்ப்பு.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், புயல் நெருங்கும் குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோர கர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:

மே 12 இல் 18.4 TMC யாகவும்
மே 31 இல் 16 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
ஜூன் 12:இல் 15 TMC யாகவும் குறையும்.
15 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை மாதங்களில் ஆறுகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே மழை இருக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

இந்தியப் பெருங்கடல் IOD செப்டம்பர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் எல்-நினோ செப்டம்பர் மாத லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

வடகிழக்கு பருவமழை.
அக் 20,21,22 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

ந. செல்வகுமார்
12.5.2024-4AM வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *