வெயில்புழுக்கம் வியர்வைக்கு பின்னர் மே 3 முதல் இடி மின்னல்மழை எங்கே?

2024 கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் ந. செல்வகுமார் ஆய்வறிக்கை.

ஏப்ரல், மே கோடை வானிலை.
கோடை வெயில் வெப்பம், அனல் ஏப்ரல் இறுதியில் அதிகரிக்கும்.ஈரோடு, சேலம் முதலிடம் பிடிக்கும் நிலையில் மே முதல் வாரம் முதல் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருத்தணி முதலிடம் பிடிக்கும்.
*
ஏப்ரல் 28,29,30 தென் கடலோரம் மற்றும் தெற்கு டெல்டா பகுதிகளில் அதிகாலை, காலை நேரத்தில் மிரட்டும் மேகம், கடும் புழுக்கம் வானிலை நிலவும், மதியத்திற்குள் ஓரிரு இடங்களில் நனைக்கும் இடி மழை இருக்கலாம்.

கோடை மழை மே 3 முதல் கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் ஆங்காங்கே ஆங்காங்கே ஒதுக்கி ஒதுக்கி பெய்யும். அந்த இடி மழை பெறும் இடத்தில் கடும் புழுக்கம், வியர்வை கொடுத்து திடீர் இடி மின்னல் மழை காற்றுடன் சில இடங்களில் ஆலங்கட்டி ஐஸ் மழையாகவும் பெய்யும். பெய்யும் இடத்தில் கூடுதலாகவும், அருகே குறைவாகவும், அருகில் ஒதுக்கியும் பெய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மே 10 க்கு மேல் 15 க்குள் வங்கக்கடலில் வலுவான நிகழ்வு உருவாகும் அது Remal புயலாக உருவெடுத்து இது ஒடிசா, மேற்கு வங்கம் பகுதியில் கடக்கும், நெருங்கி வந்தால் தமிழ்நாட்டிற்கு தாழ்வு மழை கிடைக்கும். இல்லாவிட்டால் வெப்பச்சலன மழை ஆலங்கட்டி மழையாகவும் காற்றுடன் மழையாகவும் ஆங்காங்கே மாலை இரவு அதிகாலை பொழியும்.

மே பிற்பகுதி வளிமண்டல சுழற்சிகள் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் கூடுதல் பரப்பில் புழுக்கம், வியர்வைக்கு பின்னர் மாலை இரவு இடிமழை ஒதுக்கி ஒதுக்கி கொடுக்கும்.அது பிற மாவட்டங்களுக்கும் ஆங்காங்கே கொடுக்கும்.
நாட்டின் அனைத்து பகுதிக்கும் இந்த ஆண்டு கோடை சராசரிக்கும் கூடுதல் வெயில் வெப்பம் கொடுக்கும் அதே நேரத்தில் குறைவான பரப்பில் அதிக மழை பொழிந்து ஒதுக்குதல் இருந்து நல்ல இடி மின்னல் மழை கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை:

மே இறுதியில் வெப்பச்சலன கோடை மழை தாழ்வு அமைவுகளால் கொடுக்கும். அது தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது போல தெரியும்.
மே 31 அல்லது ஜூன் 1,2 தேதிகளில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாழ்வு அமைவுடன் தொடங்கும்.

ஜூன் 1 முதல் ஜூலை 15 முடிய பருவமழை முன்னேற்றத்தில் இருக்கும். ஜூலை 15 முடிய சீரற்ற வானிலை நிலவும், குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் மழையும் குறிப்பிட்ட இடங்களில் குறைவான மழையும் கொடுக்கும். *ஜூலை மாதம் வடக்கு கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா நல்ல மழை தெரிகிறது. கடலோரகர்நாடகா, கோவா, தெற்கு கடலோர மகாராஷ்டிரா புயல் அல்லது தாழ்வு பாதிக்கும் மழை தெரிகிறது ஜூலை இறுதிக்கு மேல் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அணைகளுக்கு நீர் வரத்து கூடும்,

மேட்டூர் நிலவரம்:
ஏப்ரல் 24 இல் – 20.76 TMC இருப்பு உள்ளது.
ஏப்ரல் 30இல் 20 TMC யாகவும்
மே 31 இல் 17 TMC யாகவும் கோடை மழையை கணக்கில் வைத்தாலும்
ஜூன் 12:இல் 16 TMC யாகவும் குறையும்.
12 நாள் பாசனத்திற்கு மட்டும் நீர் இருக்கும்.
குடிநீர் தேவை இருக்கும்
ஜூன், ஜூலை அணைகளுக்கு பெரிய நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை இரண்டு வலுவான நிகழ்வுகள் கரைகடக்கும் இடத்தில் அதிக மழை தரும். அது எந்த இடம் ஆய்வில் இருக்கிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

========================

25.4.2024-4AM
விண்வெளி
அறிவியல்
ந. செல்வகுமார்
வெளியீடு

25.4.24 இன்று
தமிழ்நாட்டின்
கிழக்கு ஓரம்
மேற்கு ஓரம்
சூரியன்
உதயம் மறைவு
நேர விபரம்.

கிழக்கு ஓரம்
பழவேற்காடு
↑ 05.50AM ↓ 06:23PM
76′ டிகிரி கிழக்கு.
284′ டிகிரி மேற்கு
சென்னை
↑ 05.51AM ↓ 06:23PM
ஊட்டி
↑ 06:06AM ↓ 06:35 PM
மேற்கு ஓரம்
எருமாடு
(நீலகிரி மேற்கு ஓரம் )
↑ 06:07AM ↓ 06:36PM
தமிழ்நாட்டின் கிழக்கு ஓரத்திற்கும் மேற்கு ஓரத்திற்கும் சூரியன் உதிப்பதில் நேர வேறுபாடு15 நிமிடங்கள்.

================

மன்னார்குடியில்
சூரியன், சந்திரன்

இன்று 25.4..24 பூமி -சூரியன்
இடைப்பட்ட தூரம்: 150.490 மில்லியன் கிலோமீட்டர்.

============================

இன்றைய பகல் பொழுது
குறித்த விளக்கம்.

இன்றைய பகல் நேரம்.
05.56AM– 06:23PM
நண்பகல் நேரம்
உச்சிக்கு சூரியன் வருதல்
12.10மணி.

பகல் பொழுது
12 மணிகள்
27 நிமிடங்கள்
23 வினாடிகள்

இரவு பொழுது
11 மணிகள்
32 நிமிடங்கள்
37 வினாடிகள்

இன்றைய (25 ஏப்ரல் 2024)
பகல் பொழுது
நேற்று (24 ஏப்ரல் 2024) விட
31 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல்.

மகர ரேகையில்
இருந்த (22 Dec 2023)விட இன்று
57 நிமிடங்கள் 11 வினாடிகள்
பகல் பொழுது கூடுதல் .

கடகரேகையில்
இருந்த (21 Jun 2023) விட இன்று
17 நிமிடங்கள் 33 வினாடிகள்
பகல் பொழுது குறைவு.

இன்று ஏப்ரல் 25 நண்பகல் 12.10 மணிக்கு சூரியன் குத்துக்கதிர் விழுவதால் நிழல் இல்லா பகுதி

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா எல்லையோரம்.

===========================

சந்திரன்
மன்னார்குடியில்
இன்று சந்திரன்
உதயம் நேரம்
இரவு 7.36 மணி
112′ கிழக்கு தென் கிழக்கு

இன்று சந்திரன்
மறையும் நேரம்
நாளை காலை 7.22மணி
250’டிகிரி
தென் மேற்கு

குறிப்பு நேற்று மாலை உதித்த சந்திரன் இன்று காலை 6.38 மறையும்.

இன்று இரவு 7.36மணிக்கு 98 % முதல் நாளை காலை 7.22மணிக்கு
95 % முடிய அளவிற்கு ஒளி வீசும் தேய்பிறை.

நேற்று 24.4.24 சந்திரன் பூமி இடையே தூரம் 4,00,352 கிலோமீட்டர்.

    இன்று 25.4.24 சந்திரன் பூமி இடையே தூரம் 3,97,550
    கிலோமீட்டர்.

    நேற்று சந்திரன் இருந்த தூரத்தை விட இன்று
    2802 கிமீ குறைவு

    அடுத்து அமாவாசை நேரம்
    மே 8 -2024, காலை 8.51 மணி

    அடுத்த முழுநிலவு பௌர்ணமி நேரம்.
    மே 23 இரவு 7.23 மணி.

    25.4.24 வியாழன்

    மன்னார்குடி பகுதியில் இருந்து பார்த்தால்
    தெரியும் கோள்கள் மற்றும் நேரம் :

    புதன் கோள்
    உதயம் 4.52AM
    மறைவு 05.03PM
    உச்சி மதியம் 10.58
    கருத்து விளக்கம்:-
    4.52 AM முதல் சற்று நேரம் பார்க்கலாம் பிறகு வெளிச்சம் பிறகு
    சூரியன் பிரகாச ஒளியால் பார்க்க முடியாது.

    வெள்ளி
    உதயம் 05.22AM
    மறைவு 05.39
    உச்சி 11.31AM
    குறிப்பு :
    5.22 AM முதல் சூரியன் உதிக்கும் நேரம் வரை அதிகாலை கிழக்கே அடிவானில் பார்க்கலாம்.
    வெளிச்சம் வரும் வரை பிரகாசமாக பார்க்கலாம். பிறகு சூரியஒளி வந்துவிடும் என்பதால் பார்க்க முடியாது.

    செவ்வாய்
    உதயம் 03.44M
    மறைவு 3.43PM
    உச்சி 9.44 AM

    சூரியன் உதிக்கும் முன் கடும் முயற்சி செய்து கிழக்கே உதிக்கும் போது வெள்ளி கிராகத்திற்கு சற்று மேலே உதிப்பதை பார்க்கலாம். 5.15 க்கு பிறகு கிழக்கே
    வெளிச்சம் வந்துவிடும் பார்ப்பது சற்று கடினம்.

    வியாழன்
    உதயம் 07.06AM
    மறைவு 07.37PM
    உச்சம் 01.22 PM

    சூரியன் மறைந்த பிறகு மேற்கே
    வியாழன் மறையும் நேரம்
    இரவு 07.37வரை
    பார்க்க நன்றாக இருக்கும்.

    சனி
    உதயம் 03.13AM
    மறைவு 3.05PM
    உச்சி 9.09AM
    உதயம் 3.13 AM முதல் 5.15 வரை கிழக்கே பார்க்கலாம்
    பிறகு வெளிச்சம் சூரியன் ஒளியால்
    பார்க்க முடியாது.

    யுரேனஸ்
    உதயம் 07.04AM
    மறைவு 7.35PM
    உச்சி 01.19 PM
    பார்ப்பது கடினம்.

    நெப்டியூன்
    உதயம் 03.54.AM
    மறைவு 03.54PM
    உச்சி 09.54AM
    பார்ப்பது மிகவும் கடினம்.

    பூமி
    நாம் வாழ்வது.
    அறிந்ததே.

    ந.செல்வகுமார்
    25.04.2024-4AM
    வெளியீடு

    One comment

    1. மிக மிக அவசியமான வானிலை குறிப்புகள், (புதிய வடிவில்) உங்களது இடையறாத சேவை என்றுமே எங்ளுக்கு தேவை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *