டிசம்பர் 6,7 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பில்லை. அந்தமான் கடற்பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய தாழ்வு பகுதி தீவிரமடைந்து டிசம்பர் 7 இல் புயலாகவும் தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறும். இது டிசம்பர் 8 இல் டெல்டா மாவட்டங்களுக்கு சற்று அப்பால் அனைத்து நெருங்கி மழைப்பொழிவை தரைக்காற்றுடன் தொடக்கும். டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவை பரவலாக கொடுக்கும். டெல்டா மாவட்டங்கள் வடகடலோர மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவு பெறும். கடலில் இருக்கும் பொழுது மட்டும் வலுவான தரைக்காற்று கடல் நோக்கி பயணிக்கும். புயல் வடகடலோரம் தொட்டதும் முற்றிலுமாக செயலிழக்கும் .தாழ்வு பகுதியாக தரை ஏறி அரபிக் கடல் செல்லும். புயலுக்கு காற்று செல்லும் தவிர புயல் தாக்காது. வலுவான தரைக்காற்றும் கனமழையும் டிசம்பர் 8,9,10 தேதிகளில் இருக்கும்