மான்டோஸ் புயல் கடப்பது எங்கே? 30 மணிநேரம் கடும் காற்று கனமழை எங்கெங்கு?

மான்டோஸ் புயல் அதிகாலை நிலவர ஆய்வறிக்கை: மான்டோஸ் புயலானது கரை நெருங்கி செயலிழந்து கடக்கும் இடமாகிய கடலூருக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட மாமல்லபுரம் மரக்காணம் பகுதிக்கு தென் கிழக்கே 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு பிறகு மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வடகடலோரத்தை நெருங்கும். காரணமாக டெல்டா மாவட்டங்கள் முதல் வட கடலோர மாவட்டங்கள் வரை இன்று காலை மழை தொடங்கும் .மதியத்திற்குள் கடலோர மாவட்டங்களின் உள்பகுதிக்கும் மழை தொடங்கும்..மாலையில் இருந்து தரைக்காற்றுடன் மழை பொழிவு இருக்கும். வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 10 காலை வரை காற்றுடன் மழை இருக்கும். டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 9 இரவு வரை மழை இருக்கும். காற்றைப் பொருத்தவரை தடைக்காற்று டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை விட்டு விட்டு சாரல் மழையுடன் இருக்கும். டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான காற்று 55 கிமீ 60 கிமீ வரைக்கும் விட்டுவிட்டு இருந்து கொண்டே இருக்கும். கடலூர் முதல் திருவள்ளூர் வரை உள்ள வட கடலோர மாவட்டங்களில் சுமார் 30 மணி நேரங்களுக்கு குறையாத காற்று விட்டு 60 கி மீ இருந்து 75 கிலோமீட்டர் வரைக்கும் இருக்கும். அவ்வப்பொழுது அது 90 கிலோமீட்டர் வரைக்கும் கடலோரப் பகுதியில் எட்டும். உள்பகுதியிலும் 65- 75கிமீக்கு குறையாத காற்று வடகடலோர மாவட்டங்களின் உள்பகுதியிலும் இருக்கும். இது டிசம்பர் 10 அதிகாலை அல்லது காலை செயலிழந்து தாழ்வு மண்டலமாக பிறகு தாழ்வு பகுதியாக உள் மாவட்டங்கள் வழி அரபிக்கடல் நகரும். இதனால் உள் மாவட்டங்களில் மழை பொழிவு கொடுக்கும். தொடர்ந்து வங்கக்கடல் காற்று ஈர்த்து டிசம்பர் 13 வரை ஆங்காங்கே நல்ல மழை கொடுக்கும். மான் டோஸ் புயல் நீடித்து நின்று தரைக்காற்றை ஈர்க்கும் என்பதால் இரண்டு நாட்கள் வட கடலோர மாவட்டங்கள் இயல்பு வாழ்க்கை முடங்கும்.
காற்றின் வேகம் குறைவு என்றாலும் நாள் கணக்கில் தரைக்காற்று செல்வதால் வடகடலோர மாவட்டங்கள் சற்று பாதிக்கும் என்று தெரிகிறது.
இதற்கு அடுத்தபடியாக டிசம்பர் 16 17 18 தேதிகளில் தாழ்வு மண்டலம் வட இலங்கை டெல்டா மாவட்டங்கள் வழி அரபிக்கடல் சென்று அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகம் மழை கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *