2022 டிசம்பர் 7 இரவு வானிலை அறிக்கை: வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக உருவெடுத்தது. இது மிகவும் மெல்ல நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக மேலும் தீவிரமடைவதற்கு வாய்ப்பு. மெல்ல கடலோரம் வந்து ,மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து ,மெல்ல விலகும். இது நாளை டெல்டா மாவட்டங்களுக்கு கிழக்கு புறம் நெருங்கி வந்து நாளை டிசம்பர் 8 காலை கடலோரப் பகுதிகளில் லேசான காற்றுடன் மழை பொழிவை தொடக்கும். பிறகு படிப்படியாக மழை பொழிவு தீவிரமடைந்து தரைக்காற்றும் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக வலுபெறும். டிசம்பர் 8 மாலைக்கு மேல் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களிலும் தரைக்காற்று மேலும் வலுபெறும், டிசம்பர் 10 காலை வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வலுவான தரைக்காற்றுடன் மழைப்பொழிவு தொடரும். புயல் நோக்கி மேற்கு திசையில் இருந்தும் வடமேற்கு திசையில் இருந்தும் காற்று செல்லும், புயல் வடகடலோரம் சென்னைக்கு தெற்கு புறமாக செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்ட கரையை நெருங்கி நீடித்து நின்று வலுவான காற்றையும் கொடுத்து கரை கடக்கும் முன் செயலிழந்து தாழ்வு மண்டலமாக அல்லது நன்கமைந்த தாழ்வு பகுதியாக கடக்கும்.