2022 டிசம்பர் 21 புதன்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை
நிலநடுக்கோட்டுப் பகுதி இந்திய பெருங்கடல் மற்றும் சுமத்திரா தீவு இடைப்பட்ட பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் இலங்கையை நெருங்கி வந்த நிலையில், நேற்று அந்தமான் பல பகுதியில் நீடித்த காற்று சுழற்சி உடன் இணைந்து நீள் வட்ட வடிவில் தாழ்வு பகுதியாக நீடித்து காற்றுக்குவிப்பை மழை பொழிவு இடத்தை மாற்றி அமைத்தது.
இன்று ஒரு நன்கமைந்த நிலையில் தாழ்வு பகுதியாக இலங்கையின் கல்முனைக்கு நேர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இலங்கையை சற்று நெருங்கி, இலங்கை கரைக்கு இணையாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழக கரைக்கு இணையாக 600 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு நோக்கி நகரும்.
டிசம்பர் 21 22 23 ஆகிய தேதிகளில் இது இலங்கை தமிழக கரைக்கு இணையாக வடக்கு நோக்கி நகரும்.
இதன் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆங்காங்கே மழை இருக்கும், தமிழகத்தை பொருத்தவரை நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டம் தெற்கு பகுதி வரக்கூடிய வெள்ளிக்கிழமை வரை ஆங்காங்கே ஆங்காங்கே லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யும். அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் லேசான மிதமான மழை பொழியும்.
டிசம்பர் 23 வரை எந்த அளவிற்கு வடக்கு நோக்கி நகர்கிறதோ அந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு பகுதியிலோ பாக்ஜலசந்தி பகுதியிலோ கரை கடக்க வாய்ப்பு இருக்கிறது.
டிசம்பர் 24 தென்மேற்கு திசை நோக்கி திரும்பி வட இலங்கை அருகே அடையும்.
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று நன்கமைந்த தாழ்வு பகுதியாக தீவிரமடைந்து வட இலங்கை வழியாகவோ, மத்திய இலங்கை வழியாகவோ அல்லது பாக்ஜலசந்தி நுழைந்தோ தென் தமிழகம் அல்லது குமரிக்கடல் வழியாக அரபிக் கடலுக்கு செல்லும்.
டிசம்பர் 21 22 23 தேதிகளில் டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் மழை இருக்கும் மேலும் தென்கடலோரம் மழை இருக்கும்.
இது தவிர பிற இடங்களில் வானம் மேகம் சூழ்ந்து காணப்படும், குளிர் நிலவும். டிசம்பர் 23 க்குள் தேவையான நீரை மட்டும் பாய்ச்சுங்கள்.
டிசம்பர் 23 வரை எந்த அளவிற்கு வடக்கு நோக்கி நகர்கிறது என்பதை அறிந்து,டிசம்பர் 24 நெருங்கி டிசம்பர் 25 26 27 தேதிகளில் கரை கடக்கும் துல்லிய வழித்தடம் எது என்பதை ஓரிரு நாள்களில் அறிவிக்கிறேன். அதன்படி முன்னேற்பாடு செய்து திட்டமிட்ட வேளாண்மை மேற்கொள்ளலாம் தொடர்ந்து வானிலை அறிக்கை உடன் இணைந்து இருக்கவும்.